ஜெயம்ரவி நடிக்கும் 'இறைவன்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது..!

ஜெயம்ரவி நடிக்கும் 'இறைவன்' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது.
ஜெயம்ரவி நடிக்கும் 'இறைவன்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது..!
Published on

சென்னை,

'வாமனன், 'என்னென்றும் புன்னகை', 'மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அஹமத். இவர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'இறைவன்'. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஹரி.கே.வேதாந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜே.வி.மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்கிறார். சைக்கோ திரில்லர் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடலான 'இது போல' என்ற பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா மற்றும் சக்தி ஶ்ரீ கோபாலன் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

'இறைவன்' திரைப்படம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com