விஜய் ஆண்டனி நடித்துள்ள 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் 'மழை பிடிக்காத மனிதன்'.
விஜய் ஆண்டனி நடித்துள்ள 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது
Published on

சென்னை,

'ரோமியோ' படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் 'மழை பிடிக்காத மனிதன்'. விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் சரத்குமார், சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பிருத்வி அம்பெர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை இன்பினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்துக்கு விஜய் ஆண்டனி, அச்சு ராஜாமணி, ராய், வாகு மாசான், ஹரி டபுசியா ஆகியோர் இசையமைத்துள்ளனர். இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'தேடியே போறேன்' என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.

ஹரி டபுசியா இசையமைத்துள்ள இந்த பாடலை முத்தமிழ் எழுதியுள்ளார். ஜோத்ஸ்னா ராதாகிருஷ்ணன் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com