விஜய் ஆண்டனி நடித்துள்ள 'ரோமியோ' படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

'ரோமியோ' திரைப்படம் ரம்ஜான் அன்று வெளியாக உள்ளது.
விஜய் ஆண்டனி நடித்துள்ள 'ரோமியோ' படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது
Published on

சென்னை,

இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் 'ரோமியோ'. இந்த படத்தில் மிருணாளினி ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா, ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'ரோமியோ' திரைப்படம் ரம்ஜான் அன்று வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'வெத்தல' என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com