சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா

தமிழில் மழை, கந்தசாமி, திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்து சிவாஜியில் ரஜினியுடன் ஜோடி சேரும் அளவுக்கு உயர்ந்தவர் ஸ்ரேயா.
சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா
Published on

தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். 2018-ல் ரஷிய தொழில் அதிபர் ஆண்ட்ரு கோச்சேவை திருமணம் செய்து கொண்டார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

எனக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிவிட்டன. திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடிக்கிறேன். எனது படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. தமிழ் படமொன்றிலும் நடிக்க பேச்சு வார்த்தை நடக்கிறது. தெலுங்கு, இந்தி படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகின்றன. சினிமாவில் பெரிய நடிகை, சிறிய நடிகை என்ற பாகுபாடுகள் கிடையாது.

சினிமா துறையினர் சீனியர், ஜூனியர் என்று வித்தியாசம் பார்த்து இருந்தால் நான் நிலைத்திருக்க முடியாது. வேறு நடிகைகளும் நடித்து இருக்க முடியாது. கஷ்டப்பட்டு வேலை செய்வதுதான் முக்கியம். கடின உழைப்பாளிகளால் சினிமாவில் நீடிக்க முடியும். நான் கஷ்டப்பட்டு உழைத்ததால்தான் நிலைத்து இருக்க முடிந்தது. தற்போது திறமையான இளம் நடிகர், நடிகைகள் சினிமாவுக்கு அதிகமாக வருகிறார்கள். இது வரவேற்கத்தக்க விஷயம்.

வெப் தொடர்கள் அதிகம் வருகின்றன. அவற்றுக்கு சினிமா மாதிரி கட்டுபாடுகள் இல்லை. நினைத்ததை காட்சிப்படுத்த முடியும். நல்ல கதை அமைந்தால் வெப் தொடர்களில் நடிப்பேன். இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com