சென்சார் நிறைவு 'பிகில்' வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படுகிறது

சென்சார் நிறைவு பெற்றது 'பிகில்' வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர் கூறி உள்ளார்.
சென்சார் நிறைவு 'பிகில்' வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படுகிறது
Published on

சென்னை

விஜய் நடித்து அட்லி இயக்கிய பிகில் படம் தீபாவளிக்கு வருவது உறுதி என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடித்து இருக்கிறார்.

வில்லு படத்துக்கு பின், இருவரும் ஜோடி சேர்ந்து நடித்த படம் இது. விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி பாபு, மனோபாலா, தேவதர்ஷினி, இந்துஜா, அமிர்தா ஐயர், ரெப்பா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா ஆகியோரும் படத்தில் இடம் பெறுகிறார்கள்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகிய மூவரும் தயாரித்துள்ளனர்.

படத்தில், கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடித்து இருக்கிறார்.  பிசியோதெரபிஸ்ட் ஆக நயன்தாரா நடித்துள்ளார். படம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகி இருக்கிறது. அதற்கு இணையாக வியாபாரமும் ஆகியிருக்கிறது. படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிகில் படத்திற்கான சென்சார் நிறைவு பெற்றது பிகில் திரைப்பட வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிகில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. படம் சுமார் 3 மணி நேரம் ஓடக்கூடியவகையில் எடுக்கப்பட்டு உள்ளது.

அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டரில், பிகில் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. வெளியீட்டு தேதியை விரைவில் அறிவிப்போம். உங்கள் எல்லா அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. #BigilTrailer2 மில்லியன் லைக்குகளைத் தாண்டியுள்ளது என கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com