அருண் விஜய் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லையே' படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!

அருண் விஜய் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லையே' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து உள்ளது.
அருண் விஜய் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லையே' படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!
Published on

சென்னை,

அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'கிரீடம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமாவனர் ஏ.எல்.விஜய். அதன்பின்னர் மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி அனைவரையும் கவர்ந்தார். தற்போது இவர் அருண் விஜய் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் நடிகை எமி ஜாக்சன் கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டு கேரளாவில் சிகிச்சை எடுத்து வந்தார்.

இந்த நிலையில் 'அச்சம் என்பது இல்லையே' படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இதுகுறித்து புகைப்படங்களை அருண் விஜய் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com