ஏப்ரல் மாதம் துவங்குகிறது 'சீயான் 62' பட சூட்டிங்

விக்ரமின் 62-வது படத்தை எஸ்.யு. அருண் குமார் இயக்குகிறார்.
ஏப்ரல் மாதம் துவங்குகிறது 'சீயான் 62' பட சூட்டிங்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதில் புகழ் பெற்றவர் விக்ரம். இவர் தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதைத்தொடர்ந்து விக்ரமின் 62-வது படத்தை எஸ்.யு. அருண் குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு முன்னதாக இவர் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக சீயான் 62 என பெயரிட்டுள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்தை ரியா ஷிபு தயாரிக்கிறார். இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, சீயான் 62 படத்தின் சூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com