பவன் கல்யாண் நடிக்கும் 'ஓஜி' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்

சுஜீத் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கும் 'ஓஜி' என்ற படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளது.
பவன் கல்யாண் நடிக்கும் 'ஓஜி' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்
Published on

சென்னை,

பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியும், தெலுங்கு சினிமாவின் முன்னனி நடிகரும் ஆவார். 'அக்கட அம்மாயி இக்கட அப்பா' என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் இவர் நடித்த படங்கள் தொடர்ச்சியாக பிளாக்பஸ்டர் படங்களாக அமைந்தன. எனவே தெலுங்கு சினிமாவில் இவர் தனக்கென ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.

இவர் தற்போது, இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் 'ஓஜி' என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி, பிரகாஷ் ராஜ், ஸ்ரீயா ரெட்டி, அர்ஜுன் தாஸ், ஷாம் மற்றும் ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். டி.வி.வி என்டர்டெயின்மென்ட்டின் கீழ் டி.வி.வி தனய்யா தயாரிக்கிறார். மேலும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

ஆரம்பத்தில், இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றது. பின்னர் தேர்தல் நடைபெற்றதால் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார் பவன் கல்யாண். இதனால் சுமார் ஒரு மாத கால படப்பிடிப்பு முடிவடையாமல் இருந்தது.

தற்போது, இந்த படத்திற்கான படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் 3-ந் தேதியில் இருந்து மீண்டும் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com