'பீரிடம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

சசிகுமார் நடித்துள்ள ‘பிரீடம்’ திரைப்படம் ஜூலை 10ம் தேதி வெளியாக உள்ளது.
'பீரிடம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு
Published on

சென்னை,

சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அண்மையில் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றி தொடர்ந்து சசிகுமார் பீரிடம் படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தினை சத்யசிவா இயக்குகிறார்.

இதில் கதாநாயகியாக லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தவறே செய்யாமல் இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிக்கொண்ட இருவர் தப்பித்து செல்வதுப் போன்ற கதைக்களத்தில் இப்படம் அமைந்துள்ளது. இத்திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com