

தேனி,
தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை ஆகிய வெற்றிப் படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியான 'மாமனிதன்' விமர்சகர்களிடையே நல்ல பெயரைப் பெற்றது. இந்த நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது . அவர் தற்போது 'கோழிப்பண்ணை செல்லதுரை' என்கிற பெயரில் புதிய படத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது. புதுமுகங்கள் பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் துவங்கியுள்ளது. இதன் புகைப்படத்தை படக்குழு சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளது.