'இரண்டு வானம்' படத்தின் படப்பிடிப்பு பணி நிறைவு


இரண்டு வானம் படத்தின் படப்பிடிப்பு பணி நிறைவு
x

150 நாட்களாக நடைபெற்று வந்த 'இரண்டு வானம்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் 'வெண்ணிலா கபடி குழு' படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அதைத்தொடர்ந்து இவர், "குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, ராட்சசன்" என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் தற்போது 'முண்டாசுப்பட்டி' மற்றும் 'ராட்சசன்' பட இயக்குனர் ராம் குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் மூலம் ராம் குமாருடன் 3-வது முறையாக விஷ்ணு விஷால் இணைந்திருக்கிறார்.

இப்படத்திற்கு 'இரண்டு வானம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக வளர்ந்து வரும் நடிகை மமிதா பைஜு நடிக்கிறார். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே கொடைக்கானல் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், 150 நாட்களாக நடைபெற்று வந்த 'இரண்டு வானம்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் இப்படம் வெளியாக உள்ளது என்றும், இயக்குனர் ராம்குமார் இந்த முறை தனித்துவமான படத்தை உருவாக்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story