"கொம்புவீசி" படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு


கொம்புவீசி படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு
x
தினத்தந்தி 14 Jun 2025 2:49 PM IST (Updated: 3 July 2025 9:20 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் சண்முக பாண்டியன் படப்பிடிப்பு நிறைவடைந்ததை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் புதிய உடைகள் மற்றும் பிரியாணி வழங்கி கவுரவித்துள்ளார்.

சென்னை,

மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் நேற்று 'படை தலைவன்' படம் வெளியானது. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தினை தொடர்ந்து, சினிமாவில் நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமை மிக்க இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் 'கொம்புசீவி' என்ற படத்தில் சண்முக பாண்டியன் நடித்து வருகிறார். இதில் சரத்குமார், தார்னிகா, காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பொன்ராம் இயக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட இயக்குனர், இந்த படம் 1996 -ல் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டது என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள படக்குழு தெரிவித்துள்ளது. 'கொம்புசீவி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் நடிகர் சண்முக பாண்டியன் படக்குழுவினர் அனைவருக்கும் புதிய உடைகள் மற்றும் பிரியாணி வழங்கி கவுரவித்துள்ளார்.

1 More update

Next Story