'அரிசி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு... புரொடக்சன்ஸ் பணிகள் தொடக்கம்

'அரிசி' திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
'அரிசி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு... புரொடக்சன்ஸ் பணிகள் தொடக்கம்
Published on

மோனிகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஏ.விஜயகுமார் இயக்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் இரா.முத்தரசன், நடிகர் சமுத்திரக்கனி இணைந்து நடித்த, இன்றைய சமூகத்தில் உணவின் பின்னாலான அரசியலை, அழுத்தமாக பேசும் படைப்பாக உருவாகி வரும் திரைப்படம் "அரிசி". இப்படத்தின் முழுப் படப்பிடிப்பையும் முடித்த படக்குழு, தற்போது இறுதிக்கட்ட பணிகளைத் துவக்கியுள்ளது.

நம் உணவான அரிசியின் பின்னால் இருக்கும் அரசியலை, விவாசாயத்தின் உண்மைகளை பேசும் அழுத்தமான படைப்பாக இப்படம் உருவாகிறது. இப்படத்தின் கதையை கேட்டு அசந்துபோன இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் சமுத்திரக்கனி முதன்முறையாக திரையில் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இவர்களுடன் இயக்குநர் சுப்பிரமணியம் சிவா, சிசர் மனோகர், ரஷ்ய மாயன், பிக்பாஸ் தாமரை,கோவி இளங்கோ, மகிமை ராஜ், பெரம்பலூர் மணி சேகரன், ரமேஷ் மற்றும் மாஸ்டர் ஹரி கிருஷ்ணா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விவசாயத்திற்கு பெயர் போன தஞ்சாவூர், கும்பகோணம், குடவாசல், திருவையாறு ஆகிய இடங்களில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் துவங்கி, பரபரப்பாக நடந்து வருகிறது. படத்தின் டீசர்,டிரைலர் மற்றும் பாடல் வெளியீடு பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com