'விடாமுயற்சி' படத்தின் அஜர்பைஜான் படப்பிடிப்பு நிறைவு

அஜர்பைஜானில் நடந்து வந்த 'விடாமுயற்சி' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நேற்று முடிவடைந்தது.
'விடாமுயற்சி' படத்தின் அஜர்பைஜான் படப்பிடிப்பு நிறைவு
Published on

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' வெளியாகிறது.

'விடாமுயற்சி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியது. இதன் ஸ்டண்ட் காட்சிகள் எப்படி உருவாகிறது என்ற வீடியோவும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. மேலும் இப்படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார். சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டிருந்தது. 

இந்நிலையில், அஜர்பைஜானில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு பணிகள் நேற்று முடிவடைந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றை படக்குழு பகிர்ந்துள்ளது. அதில் நடிகர் அஜித் உள்பட படக்குழுவினர் இடம்பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com