8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் சித்தார்த் - திரிஷா கூட்டணி!

சித்தார்த்தும்,திரிஷாவும் நான்காவது முறையாக ஒரு புதிய படத்தில் ஜோடி சேர உள்ளதாக கூறப்படுகிறது.
8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் சித்தார்த் - திரிஷா கூட்டணி!
Published on

சென்னை,

சுமார் 20 ஆண்டுகளாக தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள சித்தார்த் மற்றும் முன்னணி நடிகையாக உ்்ள திரிஷா மீண்டும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஜோடி முதன்முதலில் மணி ரத்னம் இயக்கிய ‘ஆயுத எழுத்து’ திரைப்படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் தெலுங்கில் வெற்றி பெற்ற ‘நுவ்வோஸ்தானந்தே நேனோடண்டானா’ படத்திலும், கடைசியாக 2016ஆம் ஆண்டு வெளியான ‘அரண்மனை 2’ திரைப்படத்திலும் இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிலையில், சுமார் 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, சித்தார்த்தும்,திரிஷாவும் நான்காவது முறையாக ஒரு புதிய தெலுங்கு படத்தில் ஜோடி சேர உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளதாகவும், புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திட்டம் தொடர்பான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த பிரபல ஜோடி மீண்டும் திரையில் ஒன்றாக வர இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com