ஜெய் நடித்துள்ள 'பேபி & பேபி' படத்தின் 'என்ன தவம்' பாடல் வெளியானது

நடிகர் ஜெய், சத்யராஜ் மற்றும் யோகி பாபு நடித்துள்ள 'பேபி & பேபி' திரைப்படத்தின் 'என்ன தவம்' என்ற பாடல் வெளியாகியுள்ளது.
ஜெய் நடித்துள்ள 'பேபி & பேபி' படத்தின் 'என்ன தவம்' பாடல் வெளியானது
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் 'சுப்பிரமணியபுரம்', 'எங்கேயும் எப்போதும்' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றவர் நடிகர் ஜெய். இவர் தற்போது 'பேபி & பேபி' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஜெய் உடன் சத்யராஜ் மற்றும் யோகி பாபு நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கியுள்ளார். அழகான பேமிலி எண்டர்டெயினராக இப்படம் உருவாகி உள்ளது.

காமெடியும், எமோஷனும் சம அளவில் கலந்து ஒரு அசத்தலான பேமிலி எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் பிரதாப். நடிகை பிரக்யா நாக்ரா ஜெய்யின் ஜோடியாகவும், மற்றொரு நாயகியாக புதுமுகம் சாய் தன்யாவும் நடித்துள்ளனர்..

இவர்களுடன் ஆனந்தராஜ், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, இளவரசு, சிங்கம்புலி, நிழல்கள் ரவி, கே.பி.ஒய்.ராமர், கே.பி.ஒய்.தங்கதுரை, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், சேசு ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். 

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் 'என்ன தவம்' என்ற லிரிக் பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை ஹரிஸ் ராகவேந்திரா, சுவேதா மோகன் இணைந்து பாடியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com