15 கோடி பார்வைகளை கடந்த 'ஹே மின்னலே' பாடல்

அமரன் படத்தின் முதல் பாடலான 'ஹே மின்னலே' 15 கோடி பார்வைகளை கடந்துள்ளது.
Published on

சென்னை,

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'அமரன்'. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

'அமரன்' திரைப்படம் கடந்த அக்டோபர் 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது. உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படம் சுமார் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. மேலும் இப்படம் ஓ.டி.டி.யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் 100வது நாள் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது.

இந்தநிலையில், அமரன் படத்தின் முதல் பாடலான 'ஹே மின்னலே' பாடல் இணையத்தில் 150 மில்லியன்( 15 கோடி ) பார்வைகளை கடந்துள்ளதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அறிவித்துள்ளார். இந்த பாடல் ஜிவி பிரகாஷின் 700-வது பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com