10 கோடி பார்வைகளைக் கடந்த “கூலி” படத்தின் “மோனிகா” பாடல்


‘கூலி’ படத்தின் ‘மோனிகா’ பாடல் லிரிக் வீடியோ யூடியூபில் 10 கோடி பார்வைகளை கடந்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கூலி’. இத்திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14 ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 'கூலி' படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.


கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரிய வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. அத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நாகர்ஜூனா, சவுபின் சாஹிர், ரச்சிதா ராம் ஆகியோரின் கதாபாத்திரங்கள் பேசப்பட்டன.

ரஜினி நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘மோனிகா’ பாடல் ஒரு மாதத்திற்கு முன் வெளியானபோதே ரசிகர்களிடம் கவனம் பெற்றதுடன் ரீல்ஸ்களால் வைரலானது. திரையரங்க வெளியீட்டிலும் இப்பாடலுக்கு பூஜா ஹெக்டே மற்றும் சவுபின் சாஹிரின் நடனம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில்,மோனிகா பாடல் யூடியூபில் இதுவரை 10 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளதாக படக்குழு தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. அனிருத் இசையமைப்பில் விஷ்ணு எடவன் எழுதிய இப்பாடலை சுப்லாஷ்னி, அனிருத் பாடியிருந்தனர். இந்தப் பாடல் வீடியோவில் மலையாள நடிகர் சவுபின் சாஹிர் முழு எனர்ஜியுடன் அட்டகாசமாக குத்தாட்டம் போட்டு கவனிக்க வைத்துள்ளார்.

1 More update

Next Story