துல்கர் சல்மானின் 'ஹே சினாமிகா' படத்தின் பாடல் வெளியானது

நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள 'ஹே சினாமிகா' திரைப்படத்தின் பாடல் வெளியாகி உள்ளது.
துல்கர் சல்மானின் 'ஹே சினாமிகா' படத்தின் பாடல் வெளியானது
Published on

சென்னை,

நடன பயிற்சியாளர் பிருந்தா கோபால் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் 'ஹே சினாமிகா'. துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில் அதிதி ராவ் ஹைதரி, காஜல் அகர்வால், கே. பாக்கியராஜ், சுஹாசினி மணிரத்னம், குஷ்பு சுந்தர் இன்னும் பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பாடல் ஒன்று வெளியாகி உள்ளது. மகாகவி பாரதியாரின் வரிகளான 'அச்சமில்லை அச்சமில்லை' என்று தொடங்கும் இந்த பாடலை நடிகர் துல்கர் சல்மான் பாடியுள்ளார். மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

இந்த திரைப்படம் அடுத்த மாதம் பிப்ரவரி மாதம் 25-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று ஏற்கெனவே படக்குழு அறிவித்திருந்தது. இந்த திரைப்படத்திற்கு பாடலாசிரியர் மதன் கார்க்கி திரைக்கதை மற்றும் பாடல்கள் எழுதியுள்ளார். மேலும் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். பிரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராதா ஸ்ரீதர் படத்தொகுப்பு செய்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com