அயலான் படத்தில் இடம் பெற்றுள்ள 'சுரோ சுரோ' பாடல் வெளியானது...!

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'.
அயலான் படத்தில் இடம் பெற்றுள்ள 'சுரோ சுரோ' பாடல் வெளியானது...!
Published on

சென்னை,

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'அயலான்' தான் என படக்குழு போஸ்டரை வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்த படத்தின் முதல் பாடல் 'வேற லெவல் சகோ' கடந்த 2021-ம் ஆண்டு வெளியானது. கிராபிக்ஸ் பணிகள் காரணமாக படத்தின் வெளியீட்டு தேதி தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வந்த நிலையில், வருகிற பொங்கலை முன்னிட்டு 'அயலான்' படம் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்தது.

இந்நிலையில், அயலான் படத்தில் இடம்பெற்றுள்ள 'சுரோ சுரோ' என்ற பாடல், இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி தற்போது 'சுரோ சுரோ' பாடல் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com