

சென்னை,
அறிமுக இயக்குனர் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படத்துக்கு, ‘டபுள் ஆக்குபன்சி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் சந்தோஷ், சம்யுக்தா விஸ்வநாத், ரேஷ்மா வெங்கடேஷ், வினோத் கிஷண், விடிவி கணேஷ், பகவதி பெருமாள் உள்பட பலர் நடித்துள்ளனர்.
ரொமான்டிக் பேன்டஸி திரைப்படமான இதை அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சாம் சி.எஸ் இசையமைத்த இப்படத்துக்கு சந்தகுமார் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம், தமிழ் சினிமாவின் வழக்கமான எல்லைகளைத் தாண்டி புதிய அனுபவத்தைத் தரும் என்றும் அறிவியல் மற்றும் நம்பிக்கைக்கு இடையேயான மோதல், ஒருவரை இரண்டு வெவ்வேறு வடிவங்களில் நேசிப்பதில் உள்ள வலிமிகுந்த அழகு ஆகியவற்றை மையமாக வைத்துக் கதை பின்னப்பட்டுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. தற்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், ‘டபுள் ஆக்குபன்சி’ படத்தின் செகண்ட் சிங்கிளான உயிரே என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை ஆதித்யா ஆர்கே பாடியுள்ளார். பாடல் வரிகளை வித்யா தாமோதரன் எழுதியுள்ளார்.