'குபேரா' படத்தின் சிறப்பு போஸ்டர் வைரல்

தனுஷ், நாகர்ஜுனா நடித்துள்ள ‘குபேரா’ படத்தின் சிறப்பு போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
'குபேரா' படத்தின் சிறப்பு போஸ்டர் வைரல்
Published on

சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் 'குபேரா' படம் தனுஷின் 51-வது படமாக உருவாகிறது. ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. இந்தப் படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருப்பதி, தாய்லாந்து, மும்பை பகுதிகளில் நடைபெற்று முடிந்தது. தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பணம், நெருப்பு இடம்பெற்றுள்ள இந்த போஸ்டரில் தனுஷின் தோற்றம், நாகர்ஜுனாவின் புதிய லுக்கும் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com