கிச்சா சுதீப் நடித்துள்ள 'மார்க்' படத்தின் ஸ்பெஷல் டிரெய்லர் வெளியீடு

‘மார்க்’ படம் தமிழ் மொழியில் நாளை வெளியாக உள்ளது.
கிச்சா சுதீப் நடித்துள்ள 'மார்க்' படத்தின் ஸ்பெஷல் டிரெய்லர் வெளியீடு
Published on

சென்னை,

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் நான் ஈ, அருந்ததி, புலி ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்து தமிழ் மக்களின் மனதில் பதிந்தார்.

இவர் தற்போது இயக்குனர் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் மார்க் படத்தில் நடித்துள்ளார். இது கிச்சா சுதீப்பின் 47- வது திரைப்படமாகும். யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கடந்த 25 ந் தேதி தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், மார்க் படம் தமிழ் மொழியில் நாளை (ஜனவரி 1ந் தேதி) புத்தாண்டு பண்டிகையில் வெளியாக உள்ளது. அதனை முன்னிட்டு மார்க் படத்தின் ஸ்பெஷல் தமிழ் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லரை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com