பாடல் உருவான கதை இளையராஜா சொன்ன சுவாரசிய தகவல்

பாடல் உருவான கதை இளையராஜா சொன்ன சுவாரசிய தகவல்.
பாடல் உருவான கதை இளையராஜா சொன்ன சுவாரசிய தகவல்
Published on

சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. இந்த படத்தில் இளையராஜா இசையில் கமல்ஹாசனின் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற பேர் வச்சாலும் என்ற பாடலை யுவன் சங்கர் ராஜா ரீமிக்ஸ் செய்திருந்தார். இந்த பாடல் பல்வேறு சமூக வலைத்தளங்களில் வைரலானது.

தற்போது யூடியூப் தளத்தில் 1.2 கோடி பார்வையாளர்களையும் பெற்றுள்ளது. மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற பேர் வச்சாலும் பாடலை உருவாக்கியது பற்றி இளையராஜா வீடியோவில் சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவும், கமல்ஹாசனும் பேர் வச்சாலும் பாடல் உருவாக்கியபோது ஸ்டூடியோவுக்கு வந்திருந்தார்கள். டியூன் போட்டு முடித்து கவிஞர் வாலியை அழைத்து டியூனை பாடிக்காட்டினேன். அதற்கு அவர் இப்படி பாடினால், நான் எப்படி பாட்டு எழுத முடியும் என்றார். உடனே நான் துப்பார்க்குத் துப்பாய என்று தொடங்கும் திருக்குறளை அந்த டியூனுக்கு ஏற்றபடி பாடி காட்டினேன். அந்த குறளில் இருக்கும் அழுத்தம் பாடலில் இருக்க வேண்டும் என்று கூறினேன். இப்படித்தான் பேர் வச்சாலும் வைக்காம போனாலும் என்ற பாடல் உருவானது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com