

லியோ கதையை படக்குழுவினர் ரகசியமாகவே வைத்து இருந்தனர். நடிகர் நடிகைகளின் தோற்றங்கள் வெளியாகாமல் இருக்க படப்பிடிப்பு தளத்துக்கு செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது இதுதான் லியோ கதை என்ற தகவல் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் சஞ்சய்தத்தும், விஜய்யும் தந்தை, மகனாக நடிப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
சஞ்சய்தத் போதைப்பொருள் கடத்தி சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார். இதனை விஜய் எதிர்க்கிறார். இதனால் இருவருக்கும் பகை மூழ்கிறது. விஜய்யை தீர்த்து கட்ட சஞ்சய்தத் ஆட்கள் அணி அணியாக வருகிறார்கள். அவர்களிடம் இருந்து மனைவி திரிஷா மற்றும் குழந்தையுடன் விஜய் தப்பி செல்கிறார்.
ஒரு கட்டத்தில் சஞ்சயத்தத்தையும் அவரது ஆட்களையும் எதிர்த்து எப்படி வெற்றி பெறுகிறார் என்பது கதை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. தெலுங்கு நடிகர் ராம்சரண் சிறப்பு தோற்றத்தில் வருகிறார் என்றும் கூறப்பட்டு உள்ளது.
லோகேஷ் கனகராஜ் கூறும்போது, "படம் வெளியாகும்போது கதை உங்களுக்கு தெரியவரும். ஆனாலும் படத்தின் முதல் 10 நிமிடங்களை மட்டும் தவறவிடாதீர்கள்'' என்று தெரிவித்து உள்ளார்.