சச்சின் டெண்டுல்கர் பாராட்டை பெற்ற தமிழ் படம் ...எந்த ஓடிடியில் பார்க்கலாம்?


The Tamil film praised by Sachin Tendulkar...on which OTT platform can it be watched?
x

சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் 3பிஎச்கே படத்தை பார்த்ததாகவும் அதை ரசித்ததாகவும் கூறினார்.

சென்னை,

நடுத்தர குடும்பத்தை மையமாக கொண்ட சித்தார்த்தின் சமீபத்திய படமான ''3பிஎச்கே'', பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலைப் பெற்றது. ஒரு நடுத்தர குடும்பத்தின் ஒற்றுமை மற்றும் விடாமுயற்சி எவ்வாறு சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற அவர்களின் நீண்டகால கனவை நிறைவேற்ற உதவுகிறது என்பதைச் சுற்றி இப்படம் நகர்கிறது.

இந்நிலையில், ஒரு நிகழ்வில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் 3பிஎச்கே படத்தை பார்த்ததாகவும் அதை ரசித்ததாகவும் கூறினார்.

ஒரு நிகழ்வில், ரசிகர்களுடன் சச்சின் உரையாடினார், அப்போது ரசிகர் ஒருவர் அவரிடம் அடிக்கடி படங்கள் பார்ப்பீர்களா?, அப்படி சமீபத்தில் பார்த்து பிடித்த படம் எதும் உள்ளதா? என்று கேட்டார்.

அதற்கு சச்சின் , "எனக்கு நேரம் கிடைக்கும்போது படங்கள் பார்ப்பேன். சமீபத்தில் 3பிஎச்கே மற்றும் அட்டா தம்பாய்ச்சா நாய் ஆகிய படங்களை பார்த்து ரசித்தேன்'' என்றார்.

சச்சினின் பாராட்டுக்கு படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தார். “நன்றி சச்சின் சார்... இந்த வாழ்த்து, எங்க படத்துக்கு பெரிய அங்கீகாரம்!” என்று தெரிவித்திருக்கிறார்.

3பிஎச்கே போன்ற குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படத்திற்கு, சச்சின் போன்ற ஒருவரால் பாராட்டு கிடைப்பது படத்தை பற்றிய ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. இப்படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் பல மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார்.

1 More update

Next Story