'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தின் புதிய பாடலை வெளியிட்ட படக்குழு

'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தின் புதிய பாடலை வெளியிட்ட படக்குழு
Published on

சென்னை,

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு, 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'தீக்குச்சி' பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com