புதிய போஸ்டர் வெளியிட்ட 'துருவ நட்சத்திரம்' படக்குழு..!

நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு 'துருவ நட்சத்திரம்' படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.
புதிய போஸ்டர் வெளியிட்ட 'துருவ நட்சத்திரம்' படக்குழு..!
Published on

சென்னை,

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரிது வர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. சமீபத்தில் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்திருந்தது.

இன்று நடிகர் விக்ரம் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், அவரது பிறந்த நாளை முன்னியிட்டு 'துருவ நட்சத்திரம்' படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை இயக்குனர் கவுதம் மேனன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com