கமல்ஹாசன் பாடும் வீடியோவை வெளியிட்ட 'மெய்யழகன்' படக்குழு

'மெய்யழகன்' படத்தில் வரும் இரண்டு பாடல்களை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார்.
கமல்ஹாசன் பாடும் வீடியோவை வெளியிட்ட 'மெய்யழகன்' படக்குழு
Published on

சென்னை,

நடிகர் கார்த்தியின் 27-வது படத்தை விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்குகிறார். இந்த படத்துக்கு 'மெய்யழகன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மகேந்திரன் ஜெயராஜூ ஒளிப்பதிவு செய்துள்ளார். கோவிந்தராஜ் படத்தொகுப்பு செய்கிறார்.

மெய்யழகன் வருகிற 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தநிலையில் சமீபத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் நடைபெற்றது. '96' திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். படத்தில் இடம் பெற்றுள்ள 6 பாடல்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'நான் போகிறேன்' மற்றும் 'யாரோ இவன் யாரோ' என துவங்கும் இரு பாடல்களை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார்.

இந்தநிலையில், தற்போது 'யாரோ இவன் யாரோ' என்ற பாடல் உருவான விதம் மற்றும் நடிகர் கமல்ஹாசன் பாடும் வீடியோவை 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com