'சூர்யா 46' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு

சூர்யாவின் 46வது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது
'சூர்யா 46' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு
Published on

சென்னை,

நடிகர் சூர்யா ரெட்ரோ படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் இப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். அதனை தொடர்ந்து சூர்யா 'லக்கி பாஸ்கர்' பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46 வது படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா46 என்று பெயரிடப்பட்டுள்ளது.

சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஸ் இசையமைக்க உள்ளார். இதில் கதாநாயகியாக மமிதா பைஜு நடிக்கிறார். இதற்கிடையில், கடந்த மாதம் 19-ந் தேதி 'சூர்யா 46' படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் சூர்யாவின் 46வது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் நேற்று ஐதராபாத்தில் தொடங்கியதாக படக்குழு அறிவித்தது. இன்னும் 3 மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு படம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சூர்யா 46 படக்குழு படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com