‘கூலி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

முழுக்க முழுக்க ஆக்ஷன் கமர்சியல் திரைப்படமாக உருவாகி உள்ள கூலி நாளை வெளியாக உள்ளது.
‘கூலி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!
Published on

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க ஆக்ஷன் கமர்சியல் திரைப்படமாக உருவாகி உள்ள கூலி திரைப்படத்திற்கு சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. அதன்படி, ரிலீஸ் நாளில் முதல் காட்சி 9 மணிக்கு தொடங்கி இறுதிக் காட்சி நள்ளிரவு 2 மணிக்கு முடியும் வகையில் 5 காட்சிகளை திரையிடலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், படம் நாளை வெளியாக உள்ளநிலையில், பட தயாரிப்பு நிறுவனமாக சன் பிக்சர்ஸ் கூலி படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com