“பராசக்தி” திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வரும்10ம் தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தி திணிப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வரும் 10ம் தேதி வெளியாக உள்ளது.
‘பராசக்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் இன்று மாலை பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி சன் டிவியில் நாளை மாலை 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இந்த நிலையில், ‘பராசக்தி’ திரைப்படம் வெளியாக 7 நாட்கள் உள்ள நிலையில் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Related Tags :
Next Story






