யோகிபாபுவின் 300வது படத்தின் டீசர் வெளியானது!

'அர்ஜுனன் பேர் பத்து' படத்தை அறிமுக இயக்குனர் ராஜ்மோகன் இயக்கியுள்ளார்.
யோகிபாபுவின் 300வது படத்தின் டீசர் வெளியானது!
Published on

சென்னை,

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் யோகி பாபு. நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் 'கெணத்த காணோம்' என்ற படம் வெளியாகி உள்ளது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதனை தொடர்ந்து, யோகி பாபு அறிமுக இயக்குனர் ராஜ்மோகன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'அர்ஜுனன் பேர் பத்து' என்ற படத்தில் நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் காளி வெங்கட், மைனா நந்தினி, அருள்தாஸ், சென்றாயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் யோகி பாபுவின் 300வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், 'அர்ஜுனன் பேர் பத்து' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. அந்த டீசரில், யோகி பாபு ஓட்டிக்கொண்டு இருக்கும் வண்டியை சிலர் திருடிச்செல்ல, அதை கண்டுபிடிக்க போராடுகிறார் யோகி பாபு. அதன்பின் நடைபெறும் சம்பவங்களே படத்தின் கதையாக எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com