ஹிப் ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2' படத்தின் டீசர் வெளியானது

மீசையை முறுக்கு 2 திரைப்படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிப் ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2' படத்தின் டீசர் வெளியானது
Published on

தனியிசை துறையில் ராப் பாடகராக அறிமுகமானவர் ஹிப் ஹாப் ஆதி. திரைத்துறையில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருகிறார். ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு வெளியான மீசையை முறுக்கு படத்தின் மூலம் தன்னை நடிகராகவும், இயக்குனராகவும் அறிமுகப்படுத்தி கொண்டார். தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கல்லூரி மாணவனின் கனவு, காதல், வாழ்க்கைப் போராட்டங்களை எளிமையாக சொல்லிய மீசையை முறுக்கு திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மீசையை முறுக்கு படத்தின் இரண்டாம் பாகத்தை ஆதி இயக்கி நடித்துள்ளார். சுந்தர் சி - குஷ்பு தயாரித்துள்ள இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

டீசரில் மூன்று கெட்டப்புகளில் ஆதி வருகிறார். இந்த படத்தில் சைத்ரா, கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் என 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் நாசர், கருணாஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மீசையை முறுக்கு 2 திரைப்படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com