ஜெய் நடிக்கும் 'கருப்பர் நகரம்' படத்தின் டீசர் வெளியானது..!

ஜெய் நடித்துள்ள 'கருப்பர் நகரம்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
ஜெய் நடிக்கும் 'கருப்பர் நகரம்' படத்தின் டீசர் வெளியானது..!
Published on

சென்னை,

நயன்தாரா நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான 'அறம்' திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் கோபி நயினார். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, பல்வேறு விருதுகளையும் வென்றது.

கோபி நயினாரின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகும் படத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜே.டி.சக்கரவர்த்தி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு 'கருப்பர் நகரம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு கே.எஸ். பிரசாத் இசையமைத்துள்ளார். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் 'கருப்பர் நகரம்' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com