'ஓ பட்டர்பிளை' படத்தின் டீசர் வெளியானது

திகில் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை விஜய் ரங்கநாதன் எழுதி இயக்கியுள்ளார்.
'ஓ பட்டர்பிளை' படத்தின் டீசர் வெளியானது
Published on

சென்னை,

ஆண்ட்ஹில் சினிமா மற்றும் பாலம்பூர் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஓ பட்டர்பிளை’. இந்த படத்தை இயக்குனர் விஜய் ரங்கநாதன் எழுதி இயக்கியுள்ளார். இதில் நிவேதிதா சதீஷ், சிபி, நாசர், லட்சுமிப்ரியா சந்திரமௌலி, கீதா கைலாசம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

காதல் மற்றும் திகில் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு வைசாக் சோமநாத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே கவனத்தை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

சஸ்பென்ஸ் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான தருணங்கள் நிறைந்த இந்த டீசர், படத்தின் கதைக்களத்தை பற்றிய ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இதன் மூலம், ‘ஓ பட்டர்பிளை’ திரைப்படம் தியேட்டர்களில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை இப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், இந்த மாத இறுதிக்குள் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com