"றெக்கை முளைத்தேன்" படத்தின் டீசர் வெளியானது

கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள "றெக்கை முளைத்தேன்" படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
"றெக்கை முளைத்தேன்" படத்தின் டீசர் வெளியானது
Published on

சென்னை,

'சுந்தரபாண்டியன், சத்ரியன், கொம்பு வெச்ச சிங்கம்டா' ஆகிய படங்களை இயக்கி பிரபலமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இவர் தனது பங்கஜம் ட்ரீம்ஸ் புரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் றெக்கை முளைத்தேன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியான தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார்.

மேலும், ஜெயப்பிரகாஷ், ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், ஜீவா ரவி, மீரா கிருஷ்ணன் உட்பட பலர் நடித்துள்ளனர். கணேஷ் சந்தானம் ஒளிப்பதிவு செய்கிறார். தீசன் இசை அமைத்துள்ளார்.

கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்பட வில்லை. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com