யாஷ் நடித்துள்ள "டாக்ஸிக்" படத்தின் டீசர் வெளியானது

யாஷ் நடித்துள்ள ‘டாக்ஸிக்’ படம் வருகிற மார்ச் 19-ம் தேதி வெளியாக உள்ளது.

யாஷ் நடித்துள்ள "டாக்ஸிக்" படத்தின் டீசர் வெளியானது
Published on

நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். இந்த படம் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வசூலையும் வாரி குவித்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூலை வாரி குவித்தது. இதையடுத்து நடிகர் யாஷ்-க்கு கர்நாடகா மட்டுமின்றி இந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளம் உருவானது.

இதையடுத்து, யாஷ் தற்போது இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் கேங்ஸ்டர் டிராமா கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இதில் நயன்தாரா, ருக்மணி வசந்த், கியாரா அத்வானி, ஹுமா குரேஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் மார்ச் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், யாஷின் 40வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட இப்படத்தின் முதல் டீசர் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் இடம்பெற்ற அதிரடி மற்றும் வன்முறை காட்சிகள் குறித்து ரசிகர்கள் மத்தியில் விவாதங்கள் எழுந்தன.

இந்நிலையில், தற்போது ‘டாக்ஸிக்’ படத்தின் இரண்டாவது டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ரத்தம் தெரிவிக்கும் சண்டைக்காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த டீசர் ரசிகர்களின் கவனத்தை பெற்றுவருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com