'கத்தனார் - தி வைல்ட் சோர்சரர்' படத்தின் டீசர் டிரெய்லர் வெளியானது

பேன்டஸி-திரில்லர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்த படத்தின் டீசர் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.
'கத்தனார் - தி வைல்ட் சோர்சரர்' படத்தின் டீசர் டிரெய்லர் வெளியானது
Published on

ஹோம் படத்தின் வெற்றிக்குப் பிறகு ரோஜின் தாமஸ் இயக்கும் படம் 'காத்தனார் - தி வைல்ட் சோர்சரர்'. இந்த படத்தில் ஜெயசூர்யா மற்றும் அனுஷ்கா ஷெட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கிறிஸ்தவ பாதிரியார் கடமடத்து காத்தனாரின் வாழ்க்கையை பற்றியது. அவர் மந்திர சக்திகளைக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

சுமார் 75 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்த படம் மலையாளம் மட்டுமல்லாமல் 15 மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், பேன்டஸி-திரில்லர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லர் இயக்குனரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லர் தற்போது இணையத்தில் கவனத்தை பெற்று வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com