சந்தானம் நடித்துள்ள 'இங்க நான் தான் கிங்கு' படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது

'இங்க நான் தான் கிங்கு' திரைப்படம் வருகிற 17-ந்தேதி வெளியாக உள்ளது.
சந்தானம் நடித்துள்ள 'இங்க நான் தான் கிங்கு' படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது
Published on

சென்னை,

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் 'இங்க நான் தான் கிங்கு' படத்தில் சந்தானம் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியாலயா, மனோபாலா, தம்பி ராமையா, முனிஸ்காந்த், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அன்புச்செழியன் மற்றும் சுஷ்மிதா அன்புச்செழியன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன. இந்த படம் வருகிற 10-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு 17-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் மூன்றாவது பாடலான 'மாலு மாலு' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடலாசிரியர் முத்தமிழ் எழுதியுள்ள இந்த பாடலை ஸ்வேதா மோகன், நகாஷ் அஜீஸ், அந்தக்குடி இளையராஜா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com