சினிமா செய்திகள்
வெளியானது பீஸ்ட் படத்தின் மூன்றாவது பாடல்..! ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் மூன்றாவது பாடல் 6 மணியளவில் வெளியானது.
சென்னை,
நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் வரும் 14 ஆம் தேதி வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் இருந்து ஏற்கெனவே வெளியான அரபிக்குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், தற்போது பீஸ்ட் மோட் என்ற மூன்றாவது பாடலை வெளியிடுவதாக படக்குழு நேற்று அறிவித்து இருந்தது. அதன்படி இந்த பாடலானது இன்று மாலை 6 மணியளவில் வெளியானது. தற்போது பாடல் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

