தம்பியுடன் இணைந்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது

தம்பி எல்வினுடன் இணைந்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
தம்பியுடன் இணைந்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது
Published on

சென்னை,

பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தயாரிப்பில் 'டைரி' பட இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகுகிறது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். விறுவிறுப்பான ஆக்சன், திரில்லர் படமாக உருவாக உள்ள இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகையான வைஷாலி ராஜ் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்.

மேலும் ஆர். சுந்தர்ராஜன், சாம்ஸ், ஷிவா ஷாரா, கேபிஒய் வினோத், விஜே தணிகை, சென்றாயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ். இசையமைக்கும் இந்த படத்திற்கு 'டிமான்டி காலனி', 'டைரி' உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. சென்னை, தென்காசி, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்துக்கு 'புல்லட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com