"சூர்யா 46" படத்தின் டைட்டில் வெளியானது!

வெங்கி அட்லுரி இயக்கி வரும் இப்படம் வருகிற ஜூலை மாதம் வெளியாக உள்ளது.

"சூர்யா 46" படத்தின் டைட்டில் வெளியானது!
Published on

நடிகர் தனுஷின் 'வாத்தி’, துல்கர் சல்மானின் 'லக்கி பாஸ்கர்' ஆகிய வெற்றி திரைப்படங்களின் இயக்குனர் வெங்கி அட்லுரி, சூர்யாவின் 46-வது படத்தை இயக்கி வருகிறார். நாக வம்சி தாயரிக்கும் இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் இந்தப் படத்தில், நடிகைகள் ராதிகா சரத்குமார், ரவீனா டண்டன், பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்திற்கு "விஸ்வநாத் அன்ட் சன்ஸ்" என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படம் வருகிற ஜூலை மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com