'கவின்' நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு

'கவின்' நடிக்கும் புதிய படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது.
'கவின்' நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு
Published on

சென்னை,

பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளிவந்த கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் கவின். அதன்பின்னர், சரவணன் மீனாட்சி மற்றும் தாயுமானவன் போன்ற பிரபல தொடர்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பெற்றார். 2017-ம் ஆண்டில் சத்ரியன் என்ற திரைப்படத்தில் துணை நடிகராக நடித்து, முதன்முறையாக பெரிய திரையிலும் அறிமுகம் ஆனார்.

அதற்கு அடுத்த ஆண்டில் நட்புன்னா என்னான்னு தெரியுமா என்ற காமெடி படத்தில் நாயகனாக நடித்து பிரபல நடிகரானார். நடப்பு ஆண்டில் கவின் நடிப்பில் வெளிவந்த 'டாடா' திரைப்படம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. பாக்ஸ் ஆபீசிலும் வெற்றி பெற்றது.

நடிகர் கவின் அடுத்ததாக 'பியார் பிரேமா காதல்' திரைப்படத்தை இயக்கிய எலன் இயக்கத்தில் நடிக்கிறார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்விசிசி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலை தற்போது படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்துக்கு 'ஸ்டார்' என்று பெயரிடப்பட்டுள்ளது. 'ஸ்டார்' படத்தின் சிறப்பு புரோமோ வருகிற ஆகஸ்ட் 31-ந்தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com