யோகி பாபுவின் புதிய படத்தின் டைட்டில் வெளியானது!

இந்த படத்தினை சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார்.
யோகி பாபுவின் புதிய படத்தின் டைட்டில் வெளியானது!
Published on

சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருபவர் யோகி பாபு. ரஜினிகாந்த், அஜித் குமார், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததுடன், சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தற்போது பல்வேறு படங்களில் பிஸியாக நடித்துவருகிறார்.

இந்நிலையில், ‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘சத்திய சோதனை’ போன்ற படங்களை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகி பாபு புதிய படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் படத்தின் தலைப்பு ‘கெணத்த காணோம்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ள நிலையில், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த டைட்டிலை நடிகர் ஆர்யா தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆர்.பி. டாக்கீஸ், பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஆகியவை இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபெக்கா, ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com