தமன்னா நடிக்கும் 'ஒடேலா 2' திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது

ஒடெலா 2 படத்தின் படப்பிடிப்பு இன்று காசியில் துவங்கியதாக படக்குழு தெரிவித்துள்ளது.
தமன்னா நடிக்கும் 'ஒடேலா 2' திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது
Published on

சென்னை,

கடந்த 2022 இல் ஓ.டி.டி.யில் வெளியான 'ஒடேலா ரயில்வே ஸ்டேஷன்' பெரும் வெற்றிப் பெற்றது. அசோக் தேஜா இயக்கத்தில் உருவான இந்த க்ரைம் த்ரில்லர் கதையை சம்பத் நந்தி எழுதினார். இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் 'ஒடேலா 2' என்ற பெயரில் உருவாகிறது. கதை, நடிப்பு, தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப தரம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக் கதை மிகப்பெரியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'ஒடேலா 2' படத்தில் நடிகை தமன்னா பாட்டியா நாயகியாக நடிக்கிறார். இந்தக் கதை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மத்தியில் பிரபலம் என்றாலும் ஓ.டி.டி.யில் தனது சமீபத்திய ஹிட்களால் கவனம் ஈர்த்த தமன்னா இதில் இணைந்திருப்பது ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை பல மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சம்பத் நந்தி திரைக்கதையில் அசோக் தேஜா இயக்கும் இப்படத்தை மது கிரியேஷன்ஸ் மற்றும் சம்பத் நந்தி டீம்வொர்க்ஸ் பேனர்களின் கீழ் டி மது தயாரிக்கிறார். இப்படத்தில் ஹெபாப் பட்டேல், வசிஷ்டா என். சிம்ஹா, யுவா, நாக மகேஷ், வம்சி, சுரேந்தர் ரெட்டி, பூஜா ரெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் எண் 2, திரிசூலம் மற்றும் மூன்று கோடிட்ட விபூதி, அதன் மேல் உள்ள சிவப்பு ஆகியவை சிவலிங்கத்தை நாம் காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கதையில் இடம்பெறும் ஆன்மீக விஷயத்தைக் குறிப்பதாக இது உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று காசியில் துவங்கியதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com