வெளியானது "கிங்ஸ்டன்" படத்தின் டைட்டில் பாடல்

கமல் பிரகாஷ் எழுதி, இயக்கிய ‘கிங்ஸ்டன்’ படம் வருகிற மார்ச் 7ம் தேதி வெளியாக உள்ளது.
வெளியானது "கிங்ஸ்டன்" படத்தின் டைட்டில் பாடல்
Published on

சென்னை,

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகும் அவரது 25-வது படத்திற்கு 'கிங்ஸ்டன்' என்று தலைப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை ஜி.வி. பிரகாஷின் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன. கிங்ஸ்டன் படத்தை இயக்குனர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார். இது ஜி.வி. பிரகாஷ் தயாரிக்கும் முதல் படம்.

இந்த படத்தில் நடிகை திவ்யபாரதி, ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். பேச்சுலர் படத்திற்கு பிறகு இந்த ஜோடி மீண்டும் இணைந்து உள்ளனர். இந்த படத்தில் சேத்தன், அழகம் பெருமாள், இளங்கோ குமரவேல் என பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படமானது இந்தியாவின் முதல் கடல் பேய் படமாகும். எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

இப்படம் மார்ச் 7-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் 'ராசா ராசா' மற்றும் 'மண்ட பத்திரம்' என்ற பாடல்கள் வெளியாகி வைரலாகின. இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் பாடல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com