15 ஆண்டுகளுக்கு பிறகு கங்கை அமரன் எழுதி பாடிய ‘டைட்டில்' பாடல்

ஏ.வி.எம்.ரகு இயக்கியுள்ள 'அறியாத பசங்க' படத்தின் டைட்டில் பாடலை கங்கை அமரன் எழுதி பாடியுள்ளார்.
15 ஆண்டுகளுக்கு பிறகு கங்கை அமரன் எழுதி பாடிய ‘டைட்டில்' பாடல்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.வி.எம்.ரகு தற்போது 'அறியாத பசங்க' என்ற புதிய படத்தை இசையமைத்து, இயக்கியுள்ளார். மணீஷ் - சிம்ரன் நடித்துள்ள இந்த படத்தில் ரகு வில்லனாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா நடிக்கிறார்.

இதற்கிடையில் இந்த படத்தின் 'டைட்டில்' பாடலை முன்னணி இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரன் எழுதி பாடியுள்ளார். 'அறியாத பசங்க... தப்பு தெரியாத பசங்க... புரியாத பசங்க... ரொம்ப சரியான பசங்க...' என்று அந்த பாடல் தொடங்குகிறது. கிட்டதட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு கங்கை அமரன் எழுதி பாடியுள்ளார்.

இயக்குனர் ரகு கூறும்போது, “தவறான வழிகளில் செல்லும் இளம் தலைமுறையினரை திருத்தி எப்படி சரியான திசையில் கொண்டு செல்வது? என்பதே படத்தின் கதை. கங்கை அமரன் எங்கள் படத்தில் இணைந்தது மகிழ்ச்சி. படத்தை ஜூன் மாதம் எதிர்பார்க்கலாம். பல ஆண்டுகளுக்கு பிறகு கங்கை அமரனின் ‘டைட்டில்' பாடல் வெளியாகிறது. இது ‘டைட்டில்' பாடல் என்ற கலாசாரத்தை மறுபடியும் சினிமாவில் தொடரவைக்கும் என்று நம்புகிறோம்”, என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com