'லக்கி பாஸ்கர்' படத்தின் டைட்டில் பாடல் வெளியானது

நடிகர் துல்கர் சல்மானின் பிறந்த நாளையொட்டி ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் டைட்டில் பாடல் வெளியாகியுள்ளது.
Published on

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி' திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். இந்த படத்துக்கு 'லக்கி பாஸ்கர்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

'லக்கி பாஸ்கர்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் வெளியாகி இணையத்தில் வைரலானது. 'சீதா ராமம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் இரண்டாவது தெலுங்கு படம் 'லக்கி பாஸ்கர்' என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இப்படம் செப்டம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நடிகர் துல்கர் சல்மானின் பிறந்த நாளை முன்னிட்டு 'லக்கி பாஸ்கர்' படத்தின் டைட்டில் டிராக் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com