நடிகர் யாஷ் பிறந்தநாளில் புதிய போஸ்டரை வெளியிட்ட "டாக்ஸிக்" படக்குழு


நடிகர் யாஷ் பிறந்தநாளில் புதிய போஸ்டரை வெளியிட்ட டாக்ஸிக் படக்குழு
x

‘டாக்ஸிக்’ படம் வருகிற மார்ச் 19-ம் தேதி வெளியாகிறது.

சென்னை,

'கே.ஜி.எப்.' படத்தில் கதாநாயகனாக நடித்து பான் இந்திய நடிகராக உயர்ந்தவர் யாஷ். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூலை வாரி குவித்தது. இதையடுத்து நடிகர் யாஷ்-க்கு கர்நாடகா மட்டுமின்றி இந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளம் உருவானது.

இவர் தற்போது இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்கத்தில் கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் "டாக்ஸிக்" படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், நயன்தாரா, ருக்மணி வசந்த், கியாரா அத்வானி, ஹுமா குரேஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கேங்ஸ்டர் டிராமாவாக உருவாகி வரும் இந்த படம் மார்ச் 19ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், நடிகர் யாஷ் இன்று தனது 40வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், "டாக்ஸிக்" படக்குழு யாஷுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, அவரது கதாபாத்திர அறிமுக போஸ்டரையும் டீசரையும் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் அவரது பெயர் "ராயா" என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

1 More update

Next Story